சர்வதேச போதைப்பொருள் Abuse தினம் விழிப்புணர்வு நிகழ்வு

50பார்த்தது
சர்வதேச போதைப்பொருள் Abuse மற்றும் சட்டவிரோத கடத்தல் தினம் இன்று புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மதர் தெரேசா பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. 'ஆதாரம் தெளிவாக உள்ளது. தடுப்பு முதலீடு' என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வுக்கு உதவி பேராசிரியர் சாரதா வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி துணை முதல்வர் மரிய தெரேஸ், துறை தலைவர் ஜெயஸ்ரீ குருஷேவ் வாழ்த்துரை வழங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக மதர் டிரஸ்ட் தலைவர் கோபால் பிள்ளை கலந்துகொண்டு இளைஞர்களிடையே போதை பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுப்பது குறித்து விளக்கி பேசி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மற்றொரு சிறப்பு விருந்தினராக பிரம்மகுமாரி ராஜயோகா தியான மையம் கவிதா கலந்துகொண்டு சுய கட்டுப்பாடு, தியானம் மற்றும் சாந்தமாக இருப்பதற்கான யுக்திகள் குறித்து செயல்முறை விளக்கங்களுடன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பொதை பழக்கத்தை விட மிகவும் கொடுமையானது செல்போன் பயன்பாடு என்றும் விளக்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளின் போதைபொருளால் ஏற்படும் விளைவுகள், இதில் இருந்து மீள்வது தொடர்பாக மேல் ஷோ மற்றும் வில்லுப்பாட்டு ஆகியவை நிகழ்த்தி காண்பித்தனர். இறுதியாக இணை பேராசிரியர் சுவிதா நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்வில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி