புதுவையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள் இயக்கி வைப்பு

76பார்த்தது
தற்பொழுது நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் காரணமாக பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து வில்லியனூரில் பிரதான சாலையான கூடப்பாக்கம் பைபாஸ் பகுதியில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். வில்லியனூர் கூடப்பாக்கம் பைபாஸ் சாலையில் தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் புதியதாக அமைக்கப்பட்டன. புதியதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல்களை போக்குவரத்து துறை ஆய்வாளர் செந்தில் கணேஷ் தலைமை தாங்கி இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை உதவி ஆய்வாளர்கள் இராமமூர்த்தி, அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர் நேரு உட்பட காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி