சபாநாயகரை ஒருமையில் பேசிய சுயேட்சை எம்எல்ஏ நேரு வெளியேற்றம்

53பார்த்தது
புதுச்சேரி சட்டபேரவையில் பொதுக்கணக்கு குழு, உறுதிமொழி குழு போன்ற குழுக்களின் பட்டியலை முதலமைச்சர் ரங்கசாமி வாசித்தார். அப்போது சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு எழுந்து, இந்த குழுக்களில் யார் யார் இருக்கிறார்கள் என்று கேட்டதற்கு சபாநாயகர் கடந்தாண்டு இருந்தவர்களை நீடிப்பதாக தெரிவித்தார்.

முன்னதாக உறுதிமொழி குழுவின் தலைவராக இருந்த நேரு சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த காரணத்தினால் அவர் நீக்கப்பட்டு என். ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து நேரு பிரச்சனை எழுப்பியபோது சபாநாயகர் தனது அதிகாரத்துக்கு உட்பட்ட இந்த நடவடிக்கை பற்றி விமர்சிக்க தேவையில்லை என்று கூறினார்.

இதற்கு ஆவேசம் அடைந்த நேரு சபாநாயகரை ஒருமையில் பேசினார். இதனையடுத்து அவரை சபையிலிருந்து வெளியே கொண்டு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அவர் வெளியேறாத காரணத்தினால் சபை காவலர்களை உத்தரவிட்டு அவரை வெளியேற்ற உத்தரவிட்டார்.

இதனையடுத்து சபை காவலர்கள் அவரை வெளியே இழுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அவரை இந்த சபை முடியும் வரை சஸ்பெண்ட் செய்வதாக தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி