புதுச்சேரியில் மதிமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

57பார்த்தது
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வெற்றி பெற்றதையும், புதுச்சேரியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் புதுச்சேரி மதிமுகவினர் மாநில பொறுப்பாளர் கபிரியேல் தலைமையில் அண்ணா சிலை அருகே பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடினர். உடன் நிர்வாகிகள் செல்வராசு, இளங்கோ, விஜய், செந்தில்குமார், செல்லத்துரை, இராம சேகர், பிரபாகரன், கவுரி கருணாகரன், சாந்தி, பிரவீன், கிருஷ்டியான், உள்பட பலர் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து மாநில பொறுப்பாளர் கபிரியேல் தலைமையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் எம்பியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி