புதுச்சேரி ஆளுநர் மாளிகை சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து நோன்பு திறப்பை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் வேலூர் பிரியாணி, வெஜ் பிரியாணி, கோபி 65,
வஞ்சிரம் பிரை, பட்டர் நாண், குல்பி, பழச்சாறு என 18 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.