புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எந்த தொகுதியில் எந்த கட்சி நின்றால் வெற்றி பெற முடியுமோ அவர்கள் நிற்கட்டும் என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளை வாங்குவதில் உறுதியாக இருக்க வேண்டும், வெற்றி பெறும் தொகுதிகளை பெறுவதில் உறுதியாக இருக்க வேண்டும், கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ஆனால் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறியவர், என்ன வேண்டுமானாலும் பேசிக் கொண்டு செல்லட்டும் எந்த கட்சி எது வேணாலும் சொல்லட்டும், ஆனால் காங்கிரஸ் தலைமையில் தான் ஆட்சி என்றும், இல்லை என்றால் கூட்டணியே கிடையாது என ஆவேசமாக பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அப்படி இல்லை என்றால் வெற்றியோ தோல்வியோ நாம் தனித்து நிற்போம் தன்மானத்தை காப்போம் காங்கிரஸ் கட்சியின் தனித்தன்மையை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என ஆவேசமாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்.