புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா 6-ம் தேதி தொடக்கம்

52பார்த்தது
புதுச்சேரியில் வில்லியனூர், நெல்லித்தோப்பு, ரெயின்போ நகர், உப்பளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ பேராலயங்கள் உள்ளது ஆனால் எந்த இந்த பேராலயங்களில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு திருப்பலியில் பங்கு பெற்று வழிபடுவது வழக்கம்,

ஆனால் எந்த பேராலயத்திற்கு இல்லாத சிறப்பு அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு உண்டு இங்கே கிறிஸ்துவ மதம் மட்டுமின்றி அனைத்து மத பொது மக்களும் இங்கு திரளாக கலந்து கொண்டு வழிபடுவது வழக்கம் அப்படி சிறப்பு வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 334 -ம் ஆண்டு பெருவிழா வருகின்ற 6-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குவதாக ஆலய பங்குத்தந்தை அருள்தாஸ் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 6-ம் தேதி நடைபெறும் கொடியேற்ற நிகழ்வில் கடலூர் புதுச்சேரி உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் கலந்து கொண்டு கொடியேற்றத்தை தொடங்கி வைக்கிறார். இதை தொடர்ந்து தேர் பவனி, தேவ நற்கருணை ஆசீர், திருப்பலி ஆராதனை வழிபாடு நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை 8-ம் தேதி சிறப்பு தேர் பவனி நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து 15-ம் தேதி பெருவிழா திருப்பலியும் ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடைபெறுகிறது தொடர்ந்து 16-ம் தேதி புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்த அருள் தாஸ் கொடியிறக்கம் செய்து வைத்து நன்றி திருப்பலியை நிறைவேற்றுவதாக குறிப்பிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி