புதுவை மாசி மகம் தீர்த்தவாரியில் சாமி தரிசனம் செய்த கவர்னர்

69பார்த்தது
புதுச்சேரி-வைத்திகுப்பம் கடற்கரை பகுதியில் 123-ம் ஆண்டு மாசி மகம் தீர்த்தவாரி நடைபெற்றது.

மாசிமகம் தீர்த்தவாரியையொட்டி வைத்திக்குப்பம் கடற்கரையில் மைலம் முருகர், தீவனூர் விநாயகர், செஞ்சி ரங்கநாதர், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, அதேபோல் புதுச்சேரி பகுதியில் இருந்து மணக்குள விநாயகர், வரதராஜ பெருமாள், வேதபுரீஸ்வரர், முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர், உட்பட புதுச்சேரி மட்டுமல்லாது தமிழக பகுதியில் இருந்தும் சுமார் 100-க்கண்கான சுவாமி உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இதில் லட்சக்கணக்காக பக்தர்கள் குவிந்து அனைத்து சுவாமிகளையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கைலாஷநாதன் கலந்து கொண்டு வைத்திகுப்பம் பச்சைவாழியம்மன் கோயில் மற்றும் பல்வேறு ஊர்களில் உள்ள கோயில்களில் இருந்து கொண்டுவரப்பட்டு கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள கோயில் உற்சவ சிலைகள் முன்பு பொதுமக்களோடு வழிபாடு செய்தார். தொடர்ந்து அனைத்து உற்சவர் சுவாமிகளையும் நடந்தே சென்று பார்வையிட்டு வழிபாடு செய்தார்.

உடன் பொதுப்பணித்துறை அமைச்சர் லஷ்மிநாராயணன், நியமன எம். எல். ஏ ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி