புதுச்சேரியில் நாளை முதல் வாகன ஓட்டிகள் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனை வலியுறுத்தும் வகையில் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கடற்கரை சாலை காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட வாகனப் பேரணியில் காவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என 1400-க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து கலந்து கொண்டனர்.
பேரணியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஹெல்மெட் அணிவதற்கான உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதி எடுத்துக் கொண்டனர்.