ஆங்கில புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்தில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி வந்துள்ள சுற்றுலா பணிகள் மற்றும் பொதுமக்கள் ஆண்டின் முதல் நாளான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்கள் தனது கவர்னர் மாளிகையில் இருந்து பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்து நடந்தே சென்றவாறு ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகரை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.