புதுச்சேரி: மன்மோகன் சிங் படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

69பார்த்தது
புதுச்சேரி: மன்மோகன் சிங் படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர் மரியாதை
முன்னாள் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களது மறைவையொட்டி, புதுச்சேரி குபேர் சாலையில் உள்ள மேரி கட்டட அரங்கில் மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 28) நடைபெற்றது. அவரது திருவுருவப் படத்திற்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் இலட்சுமிநாராயணன், அரசு கொறடா A. K. D ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன், அரசு செய்தி மற்றும் விளம்பரம் துறை செயலர் கேசவன், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி