புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையால் தற்போது வெளியிடப்பட்ட பள்ளிநேர பாடவேளை அட்டவணையை கிராமப்புற மற்றும் நகர்ப்புற பள்ளிகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு திருத்தம் செய்ய வேண்டும், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை உள்ளடக்கிய பள்ளிக் கல்வித் துறையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பள்ளிக் கல்வித் துறை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாரி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கம் கூட்டமைப்பு தலைவர் பாலகுமார் மற்றும் புதுச்சேரி அரசு ஆசிரியர் சங்கத்தின் ஒருங்கிணைப்புகுழு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்களை எழுப்பினர்.