புதுச்சேரி அரசு, கலை. பண்பாட்டுத்துறை சார்பில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 125 வது பிறந்த நாள் விழா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள புதுச்சேரி நகராட்சி அரங்கில் இன்று கொண்டாடப்படப்பட்டது.
இதனையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி திருவுருவப் படத்திற்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணன் குமார், தலைமைச் செயலர் சரத் சவுகான், கலை, பண்பாடு துறை அரசு செயலர் முகமது அஹ்சன் அமித் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சியை துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.