புதுவையில் 15 நாட்களில் ரேஷன்கடையில் இலவச அரிசி வழங்கப்படும்

73பார்த்தது
புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல்துறை சார்பில் தேசிய நுகர்வோர் தின விழா காமராஜர் மணிமண்டபத்தில் இன்று நடந்தது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளை கவுரவித்தார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, கடந்த காலத்தில் ரேஷன்கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணைய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இடையில் ஏற்பட்ட கட்டாய சூழலால் இவை நிறுத்தப்பட்டது. அரிசிக்கு பதிலாக நுகர்வோருக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தி வந்தோம். வங்கிகளில் செலுத்தப்படும் பணம் பலவிதமாக செலவாகிறது என்பதால் மீண்டும் அரிசி வழங்க மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று மீண்டும் ரேஷன்கடைகளை திறந்து தீபாவளிக்கு இலவச அரிசி வழங்கியுள்ளோம் என தெரிவித்தார்.
அடுத்தபடியாக மாதந்தோறும் சிகப்பு கார்டுக்கு 20, மஞ்சள் கார்டுக்கு 10 கிலோ அரிசி வழங்க உள்ளோம். இதற்காக டெண்டர் கோரப்பட்டு, விநியோக ஆணை வழங்க உள்ளோம். இன்னும் 15 நாட்களில் ரேஷன்கடைகளில் இலவச அரிசி வழங்கப்படும். மேலும் பல உணவுப்பொருட்களை வழங்கும் எண்ணமும் அரசுக்கு உள்ளது எனவும் முதல் அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி