புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் அமரர் வை. வெங்கடசுப்பா ரெட்டியார் அவர்களின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது இதனையொட்டி புதுச்சேரி, மறைமலையடிகள் சாலை - வெங்கடசுப்பா ரெட்டியார் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டப்பேரவைத் துணைத்தலைவர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.