பஸ் நிலையத்தை ஆய்வுசெய்த முன்னாள் முதல்வர், காங்கிரஸ் MP

0பார்த்தது
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடித்துவிட்ட கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை கடந்த மே 2ம் தேதி கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து 2 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை கடைகள் திறக்கப்படாமல் உள்ளது. மேலும், பேருந்துகள் நிறுத்தும் கட்டிகள் உடைந்த நிலையிலும், கட்டிடம் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும் காணப்படுகிறது.

இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ ஆகியோர் இன்று காலை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, பேருந்து நிலைய கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்ட இடங்கள், பேருந்து நிறுத்தும் இடத்தில் உடைந்து சீரமைக்கப்பட்டு வரும் கட்டைகள், திறக்கப்படாமல் மூடிக்கிடக்கும் கடைகள், முதலுதவி அறை, இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், கழிவறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி