ஹோலி பண்டிகையானது வடமாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் புதுச்சேரியில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் தங்கள் பகுதியில் ஹோலி பண்டிகையக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில்லில் ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். பல வட மாநிலத்தவரும் அப்பகுதியில் வசிப்பதால் அப்பகுதியில் உள்ள
உபாசனாவில் வண்ணமயமான ஹோலி பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான வெளிநாட்டவர்கள் தங்களது உடலில் வண்ணப் பொடிகளை பூசிக்கொண்டும் தண்ணீரை ஊற்றிக் கொண்டும், பாடலுக்கு ஏற்றபடி நடனமாடி ஹோலி பண்டிகையை உற்சாகமாக நடனமாடி கொண்டாடினார். மேலும் ஒருவருக்கு ஒருவர் ஹோலி பண்டிகை வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டனர். இந்த ஹோலி பண்டிகையானது சமூகத்தின் ஒற்றுமை மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டியது.