தீயணைப்பு துறைக்கு ரூ. 5. 89 கோடியில் 10 தீயணைப்பு வாகனங்கள்

57பார்த்தது
புதுச்சேரி அரசு தீயணைப்புத்துறையில் ரூ. 5. 89 கோடி மதிப்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 10 நவீன பல்நோக்கு தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு துறைக்கு அர்பணிக்கும் விழா கடற்கரை காந்தி சிலை முன்பு நடைபெற்றது. துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பூஜை செய்து கொடியசைத்து நவீன தீயணைப்பு வாகனங்களை துறைக்கு அர்பணித்தார். இந்த நவீன பல்நோக்கு தீயணைப்பு வாகனங்கள் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள பல்வேறு தீயணைப்பு நிலையங்களுக்கு தலா ஒரு வாகனம் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பொதுச்சேவைக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோட்ட தீயணைப்பு அதிகாரி தலைமையில் உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி மற்றும் நிலைய அதிகாரிகள் ஆகியோர் மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அனைத்துப்பிரிவு தீயணைப்புத்துறை ஊழியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி