புதுவை மகளிர் காவல்நிலையம் அதிகரிக்க பெண் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

76பார்த்தது
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய பெண் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரியங்கா, இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளதாகவும், ஆனால் அவர்கள் சென்று முறையிடுவதற்கான மகளிர் காவல் நிலையங்கள் அதிகம் இல்லை என்றும், புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை 3 மகளிர் காவல் நிலையங்கள் தான் உள்ளது. பெண்கள் பாதுகாப்பு முக்கியம். புதுச்சேரியில் மகளிர் காவல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும். புதுச்சேரி பெண்களுக்கான பாதுகாப்பாக ஊராக மாற்ற வேண்டும். அதற்கு முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பேசினார். இது மட்டும் இல்லாமல் காவல்துறையில் பெண் காவலர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

தொடர்புடைய செய்தி