காரைக்கால் கோயில் நில மோசடியில் பெண் அரசு நில அளவையர் கைது.

68பார்த்தது
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பார்வதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு விற்பனை செய்வதாகவும், போலியான ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.
இதனை அடுத்து மாவட்டத் துணை ஆட்சியர் ஜான்சன் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அரசு சார்பில் பொது மக்களுக்கு விற்பனை செய்வதாக போலியான அரசு விளம்பரத்தை தயார் செய்து, போலியான ஆவணங்களை உருவாக்கி கோவில் இடங்களை விற்பனை செய்து வந்த வழக்கில் காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி பகுதி சேர்ந்த சிவராமன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
காரைக்கால் என். ஆர். காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி ஆனந்த் என்பவரிடம் பணம் வாங்கி கொடுத்ததாக சிவராமன் தெரிவித்தார். இதில் பல்வேறு அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற நோக்கில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்ட நிலையில் காரைக்கால் அரசு துணை நில அளவர் ரேணுகாதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.
லட்சக்கணக்கில் பணம் பெற்று, கோயில் நில மோசடிக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது விசாரணையில் அம்பலமானது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி