இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் நாடு முழுவதும் இன்று வெளியானது இதேபோன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் கோட் திரைப்படம் வெளியானது.
திரைப்படம் வெளியானதையடுத்து விஜய் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர் ஒரு சில தியேட்டர்களுக்கு முன்பு கூடிய விஜய் ரசிகர்கள் தமிழக வெற்றிக்கழக கொடியுடன் பட்டாசுகள் வெடித்தும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டினார்கள்.
புதுச்சேரி பாலாஜி திரையரங்கில் வெளியான விஜய் நடித்த கோட் திரைப்படத்தை பார்ப்பதற்கு புதுச்சேரி வாழை குளத்தை சேர்ந்த 90-வயது மூதாட்டி ஒருவர் திரைப்படம் பார்க்க டிக்கெட்டுடன் வந்திருந்தார் அவரை பூ தூவி வரவேற்ற விஜய் ரசிகர்கள் அவரிடம் ஆசிர்வாதமும் வாங்கினார்கள்.