விழிகள் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை மற்றும் நியூ எவர்கிரீன் ஆங்கில உயர்நிலைப்பள்ளி, ஜோதி கண் பரிசோதனை நிலையம், பரமாத்மம் வர்ம குருகுலம் மற்றும் மணக்குள விநாயகர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி NSS தன்னார்வளர்கள் இணைந்து நடத்திய கண் பரிசோதனை, பொது மருத்துவ முகாம் மற்றும் சுகாதார ஆரோக்கியத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நியூ எவர்கிரீன் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இம்முகாமை பள்ளியின் தாளாளர் உயர்திரு. கா. ஹபீப் ரஹ்மான், தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் உணவு பழக்க வழக்கத்தை பற்றி தெரிவித்தார். இந்த முகாமிற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழிகள் அறக்கட்டளை நிறுவனர் பிரேம்குமார், செயலாளர் கீர்த்தனா மற்றும் நியூ எவர்கிரீன் ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. மு. சாதிக் அலி,
பொறுப்பாசிரியை திருமதி. க. வினோதினி மற்றும் சக ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.