'நீட்' மதிப்பெண்கள் அடிப்படையில் புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறப்பு கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்பதற்கு பதிவு செய்ய, விருப்ப பாடங்களை தேர்வு செய்ய மற்றும் கட்டணம் செலுத்த நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதற் கான கால அவகாசம் நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே போல் அரியூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல் மருத்து வக்கல்லூரி, மாகி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களுக்கு தகுதி வாய்ந்த மாணவர்கள் புதிதாக நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இளநிலை ஆயுர்வேத படிப்பில் அரசு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படாத 10 இடங்கள் சுயநிதி பிரிவுகளுக்கு மாற்றப்படுகின்றன. இதற்கு ரூ. 2 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவ ரங்களுக்கு சென்டாக் இணையதளத்தை (www. centacpuducherry. in) பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.