ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருக்கான தேர்தல்

572பார்த்தது
ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு பிரான்ஸ் நாட்டின் சார்பில் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலும் இதற்கான தேர்தல் டெல்லி, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்கும் வகையில் நான்கு வாக்குப்பதிவு மையங்கள் புதுச்சேரி மற்றும் சென்னைக்கான பிரெஞ்சு தூதரகத்தின் சார்பில் புதுச்சேரி, சென்னை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அமைக்கப்பட்டு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த வாக்குப்பதிவில் 4, 546 வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் 81 உறுப்பினர்கள் பிரான்ஸ் நாட்டு சார்பில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் 38 அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி