போதையில் கடற்கரை பாறை இடுக்கில் சிக்கிய ஒரிசா மாநில தொழிலாளி

58பார்த்தது
புதுச்சேரி சுற்றுலா மாநிலம் என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருகை புரிகின்றனர். மேலும் கூலி வேலை மற்றும் கட்டுமான பணிகளுக்காகவும் பல்வேறு வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் புதுச்சேரி வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரவு புதுச்சேரி கடற்கரை சாலை நகராட்சி அலுவலகம் எதிரே ஒரிசாவில் இருந்து வந்த தொழிலாளி மது போதையில் கடற்கரைச் சாலை ஓரத்தில் கொட்டியுள்ள பாறையின் இடுக்கில் மாட்டிக் கொண்டு தவித்துள்ளார். இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் உதவியுடனும் காவல்துறை உதவியுடனும் அந்த நபரை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி