புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வம்பாக்கீரைபாளையம் புதுதெரு மற்றும் திப்புராயப்பேட்டை ஏழைமாரியம்மன் கோயில் வீதியிலும் ஸ்மார்ட் சிட்டியின் கீழ் நகராட்சி மூலம் திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முயற்சியால் அங்கு எல்-வடிவ வாய்க்கால் கட்டை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினரிடம் சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி பொதுமக்கள் இங்கு வாய்க்கால் கட்டை அமைத்துக் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நகராட்சி அதிகாரிகளை தொடர்ச்சியாக நேரில் சென்று சந்தித்து பணிகள் குறித்து பேசினார். சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையை ஏற்று இப்பொழுது பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. அதனை திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் இன்று நகராட்சி இளநிலை பொறியாளர் சண்முகம் அவர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.