மும்மொழி கொள்கை எதிர்த்து புதுவை திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

57பார்த்தது
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று துணைநிலை ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது உறுப்பினர்கள் பேசினார்கள். முதலில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் பேசத் தொடங்கினார். அப்போது அவர் மும்மொழிக் கொள்கையில் புதுச்சேரி அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார். 1969ல்
இந்தியை கொண்டு வந்தது காங்கிரஸ் தான் என அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், நமச்சிவாயம் பேசினார்கள். இதற்கு காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆளுங்கட்சியினருக்கும் எதிர்கட்சியினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அரைமணி நேரமாக வாக்குவாதம் தொடர உறுப்பினர்கள் பேசியதை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.

இறுதியாக கல்வித்துறை அமைச்சரான நமச்சிவாயம், ஹிந்தி திணிப்பை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி தான். இந்தி எதிர்ப்பு போராட்டம் மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது தான் நடந்தது என்று குறிப்பிட்டார். மேலும் முன்மொழி கொள்கை தான் மத்திய அரசின் கொள்கை. பாஜகவின் கொள்கை. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை வந்து விட்டது. ஆளுநர் உரையிலேயே இதைக் குறிப்பிட்டதாக கூறினார்.

இதனை தொடர்ந்து அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி