4-ம் வட்டார பள்ளிகளுக்கு இடையேயான செஸ் விளையாட்டுப் போட்டி

51பார்த்தது
புதுவை அரசு கல்வித்துறை விளையாட்டு மற்றும் உடற்கல்வித்துறை சார்பில் நான்காம் வட்டார பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி துவக்க விழா மற்றும் செஸ் விளையாட்டு போட்டி புதுவை வில்லியனூர் அரும்பார்த்தபுரம் ப்ளூ ஸ்டார் மேல் நிலைப்பள்ளியில் தொடங்கியது.
விழாவில் உடற்கல்வி விரிவுரையாளர் முனைவர் ரஷீத் அகமத் அனைவரையும் வரவேற்றார். நான்காம் வட்டார விளையாட்டுக் குழு தலைவர் பி. எம் ஸ்ரீ கலைஞர் கருணாநிதி அரசு மேனிலைப் பள்ளி துணை முதல்வருமான பாக்கியலட்சுமி போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
ப்ளூ ஸ்டார் பள்ளி முதல்வர் வரலட்சுமி, ப்ளூ ஸ்டார் பள்ளி துணை முதல்வர் சாலை சிவ செல்வம் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர். ஃபிடே ஆர்பிட்டர் நாராயணன் போட்டி விதிகளை விளக்கிக்ககூரி போட்டி ஆர்பிட்டராக செயல்பட்டார்.
இறுதியில் பி. எம். ஸ்ரீ கலைஞர் கருணாநிதி அரசு மேனிலைப் பள்ளி உடற்கல்வி விரிவுரையளரும் போட்டி செயலாளருமான அமல் ராஜ் ஜார்ஜ் சேவியர் நன்றி கூறினார். போட்டியில் 14 வயது பிரிவில் 33 அணிகளும் 17 வயது பிரிவில் 22 அணிகளும். 19 வயது பிரிவில் 9 அணிகளும் கலந்து கொண்டன.
போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கர், செந்தில் குமரன், பாரதி, நந்தினி மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி