கடலூர் அதிமுக வார்டு செயலாளர் புதுவை எல்லையில் வெட்டி கொலை

57பார்த்தது
கடலூர் நவநீதம் நகர், பத்மாநாதன். (47) அதிமுக வார்டு செயலாளர் திருப்பனாம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு நடந்த கோயில் திருவிழாவில் கலந்துகொண்டு இன்று காலை டூவீலரில் வீடு திரும்பிகொண்டிருந்தார். அப்போது அவரை இருளஞ்சந்தையருகே காரில் வந்த மர்ம கும்பல் காரால் மோதி வழிமறித்து சரமரியாக தாக்கி கத்தியால் வெட்டி கொலைசெய்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாகூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசௌதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும். இதுகுறித்து நடத்திய முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கடலூரை சேர்ந்த மர்ம கும்பல் பக்தா (எ) பத்மநாதனை வெட்டிகொலை செய்தது தெரியவந்தது. அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி