புதுச்சேரி நகர பகுதியில் குடிநீர் உவர்ப்பு நீராக அரசால் விநியோகம் செய்யப்படுகிறது. முத்தியால்பேட்டையில் குடிநீர் சுகாதாரமற்றும், குடிக்கும் தன்மையுடனும் இல்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் சுகாதாரமான குடிநீரை வீடுகளுக்கு வழங்கக்கோரி முத்தியால்பேட்டை காங்கிரஸ் சார்பில் மணிக்கூண்டு அருகே 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன் தலைமையில் இன்று காலை 9 மணிக்கு போராட்டத்தை காங்கிரசார் தொடங்கினர். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
முத்தியால்பேட்டை தொகுதியில் குடிநீர் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. குடிநீரில் 500 டிடிஎஸ் உப்புத்தன்மை இருக்க வேண்டும். ஆனால் 2 ஆயிரத்து 400-ஆக உள்ளது. இந்த குடிநீரை தொடர்ந்து குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, சில ஆண்டில் நீரழிவு நோய் ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தார்.