மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் நினைவு தினம்

53பார்த்தது
புதுச்சேரி வில்லியனூர் தொகுதியின் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லியனூர் பகுதி தென் கோபுர வீதியில் வில்லியனூர் பூக்கடை உரிமையாளர்கள், பூக்கடை
ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், வில்லியனூர் வணிக வியாபாரிகள் சார்பில் ஏற்பாடு
செய்யப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் வில்லியனூர்
பூக்கடை ரமேஷ்,
ராஜ்பிரபு, மற்றும் பிரபு
டிஜிட்டல் உரிமையாளர் பிரபு, பிரகாஷ் , சந்துரு, சண்முகம், ரவி மற்றும் ஏராளமான வில்லியனூர் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி