புதுச்சேரியில் உள்ள ஒரு தியேட்டரில் கோட் திரைப்படம் ரத்து

50பார்த்தது
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் புதுச்சேரியில் உள்ள அனைத்து திழையரங்குகளிலும் இன்று காலை வெளியாகியது. இதற்கான டிக்கெட்டுகள் நேற்றே முன்பதிவு செய்து விற்று தீர்ந்தது. இந்நிலையில். புதுச்சேரி வில்லியனூரில் உள்ள அசோக் திரையரங்கில் இன்று தி கோட் திரைப்படம் வெளியாக இருந்தது. இதற்காக திரையரங்கம் வாயிலில் வாழைமரம், தோரணங்கள் கட்டப்பட்டு திரைப்படத்தையும், ரசிகர்களையும் வரவேற்க தயாராக இருந்தது. ஆனால் திடீரென மின்சார ஒயர் தீப்பற்றி எரிந்ததால் இன்று அந்த ஒரு திரையரங்கில் மட்டும் தி கோட் திரைப்படம் வெளியாகவில்லை. இதற்கான அறிவிப்பு தியேட்டர் வாயிலில் ஒட்டப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து டிக்கெட் எடுத்தவர்களுக்கு அவர்களது பணம் திருப்பிதரப்படும் என திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி