புதுச்சேரியில் விழாக்காலங்களில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிமாநில மற்றும் வெளிநாடு சுற்றுலா பநணிகளின் வருகை அதிகரிக்கும். அப்போது நகரின் பாதுகாப்பு, போக்குவரத்து, ஏற்பாடு போன்றவற்றை முதலமைச்சர் ரங்கசாமி காரில் வந்து பார்வையிடுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நகரம் விழா கோலம் பூண்டுள்ளதை நள்ளிரவில் காரில் இருந்தபடியே உலாவந்து பார்த்து ரசித்தார்.
பின்னர் சுய்ப்ரேன் வீதியில் உள்ள ஒரு காபி கடைக்கு வந்தார். அப்போது அங்கு வந் சுற்றுலா பயணிகள் முதலமைச்சருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி செல்பி எடுத்து கொண்டனர். இதனை தொடர்ந்து முதல்வர் காபி குடித்து விட்டு நகர் வலத்தை தொடர்ந்தார்.