பூரண மதுவிலக்கு புதுவையில் சாத்தியமில்லை என முதலமைச்சர் உரை

78பார்த்தது
புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது உறுப்பினர்கள் பேசினார்கள்.

இறுதியாக முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், நமது அரசு பொறுப்பேற்ற பிறகு வருவாய் உயர்ந்துள்ளது. தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வருவாயும் உயர்ந்துள்ளது.

மாநில மேம்பாட்டு வளர்ச்சி்குறித்து தொலைநோக்கு பார்வையோடு் துணைநிலை ஆளுநர் தனது உரையில் பேசியுள்ளார்.

கடன் தள்ளுபடி, நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்ப்பது குறித்து நாம் கூறியது குறித்து துணைநிலை ஆளுநரும் பேசியுள்ளதாகவும், அது கிடைக்கும்.

பூரண மதுவிலக்கு என்றால் என்னை பொருத்தவரை குடிக்கமுடியாது என சொல்ல முடியுமா. முடியாது. முழு மதுவிலக்கு சாத்தியம் என்றால் நான் ஏற்கிறேன். ஆனால் அது முடியாது. பாதிப்பு இல்லாத வகையில் வருமானத்திற்கான நடவடிக்கை தான் அரசு எடுத்து வருகிறது.

புதுச்சேரிக்கு மதுபான தொழிற்சாலை கொண்டு வந்தால் 500 கோடி ரூபாய் வருமானம் வர வாய்ப்புள்ளது. அதனால்தான் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

புதுச்சேரியில் நீர் ஆதாரத்தை பாதிக்காத வகையில் இதைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இந்த தொழிற்சாலை கொண்டு வந்தால் புதுச்சேரியில் இருக்கக்கூடிய ஐயாயிரம் பெண்களுக்கும், அதேபோன்று 5000 ஆண்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என பேசினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி