புதுச்சேரி மாநிலத்திற்கான 2024-25 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 2 இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே மாநிலத்தில் 6 மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் தாக்கல் செய்யப்பட்டது. மீதமுள்ள 6 மாதங்களுக்கான ரூ.12, 700 nகோடிக்கான நிதிநிலை அறிக்கை தற்போது தாக்கல் செய்யப்பட்டது.
உள்நாட்டு நிதி வருவாயாக ரூ. 6,914 கோடியாகவும் மத்திய அரசின் கொடை ரூபாய் 3,268 கோடியும் நிதி பற்றாக்குறையை போக்க ரூ. 2,066 கோடி கடன் வாங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். இந்த அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து முக்கிய அம்சங்களையும் அறிவித்தார்.