செவாலியே சிவாஜி கணேசன் பிறந்த நாள் புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கிழக்குக் கடற்கரைச் சாலை - கருவடிக்குப்பம் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் J. சரவணன் குமார், சட்டப்பேரவைத் துணைத்தலைவர் ராஜவேலு, அரசு கொறடா AKD ஆறுமுகம், முதல்வரின் பாராளுமன்றச் செயலர் ஜான்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் KSP ரமேஷ், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.