ஃபெஞ்சால் புயல் காரணமாக காலை முதல் புதுச்சேரியில் மிதமான மழையும் மிதமான காற்றும் வீசி வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மழையின் பாதிப்புகள் குறித்தும், கடல் சீற்றம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமி புயல் மற்றும் மழை நிலவரம், நிவாரண பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார்.
மேலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயாராக இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.