இதுகுறித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா பேசுகையில்,
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மூலம் பிரதமர் மோடி களைத்தது போல, வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் ரங்கசாமியும் பாஜகவினரால் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றும், முதலமைச்சர் ரங்கசாமிக்கு எந்த குறிக்கோளும் கிடையாது. மக்கள் பிரச்சினைகள் குறித்து கவலைபடாமல் தனது நாற்காலியை காப்பாற்றிகொள்வதற்காக, பாஜகவினர் எது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என விட்டுவிட்டார் என தெரிவித்தார்.