புதுச்சேரி அரசு சமூக நலத்துறை மூலம் இந்திராநகர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு புதுச்சேரி அரசின் விலையில்லா மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கும் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டின் அருகே உள்ள அப்பா பைத்தியசாமி கோவில் வளாகத்தில் வழங்கப்பட்டது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அரசு கொறடாவுமான ஏ. கே. டி. ஆறுமுகம் பரிந்துரையின் அடிப்படையில் இந்திராநகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளிகள் 11 நபர்களுக்கு புதுச்சேரி அரசு சமூக நலத்துறை மூலம் விலையில்லா மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களை முதலமைச்சர் ரங்கசாமி, தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அரசு கொறடாவுமான ஏ. கே. டி. ஆறுமுகம் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இயக்குனர் ராகினி, துணை இயக்குனர் ஆறுமுகம், அதிகாரிகள் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.