புதுச்சேரியில் வேளாண் மற்றும் விவசாயிகள் துறை சார்பில் விவசாயிகளுக்கு தரமான காய்கறிகளை வீட்டு புறக்கடை மற்றும் மாடியில் அவர்களே சாகுபடி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைக்க ரூபாய் 200 மதிப்புள்ள காய்கறி விதைகள் வழங்க முடிவெடுத்து ஆடி பருவத்திற்கான காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சட்டபேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு விவசாயிகளுக்கு காய்கறிகள் விதைகள் தொகுப்பினை வழங்கினார். உடன் சபாநாயகர் செல்வம், வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் உடனிருந்தனர்.