மாநில அளவிலான கபடி போட்டி முதல்வர் பரிசளிப்பு

63பார்த்தது
புதுச்சேரியில் 51-ஆவது மாநில அளவிலான கபடி போட்டி இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வந்தது. இப் போட்டியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகிய பகுதிகளில் இருந்து 76 அணிகள் சார்பில் 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் திருபுவனை வேலழகன் அணியும், மங்கலம் சங்கர் ப்ரண்ட்ஸ் அணியும் மோதின. இறுதி போட்டியை முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் துவக்கி வைத்து போட்டியை கண்டு ரசித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் திருபுவனை வேலழகன் அணி 41-13 என்ற செட் கணக்கில் மங்கலம் சங்கர் ப்ரண்ட்ஸ் அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தனர்.

தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி முதலிடம் பிடித்த திருபுவனை வேலழகன் அணிக்கு பரிசு கோப்பையையும்,   50, 000 ரூபாய் ரொக்க பரிசுசம் வழங்கி பாராட்டினார். இரண்டாம் இடத்தை பிடித்த மங்கலம் சங்கர் ப்ரண்ட்ஸ் அணிக்கு பரிசுகோப்பை மற்றும் 25, 000 ரூபாய் ரொக்க பரிசும், அதே போல் மூன்றாம் இடம் பிடித்த சாய்ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு பரிசு கோப்பை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கினார். தொடர்ந்து நான்காவது இடம் பிடித்த ஒய் எல் சி அணிக்கு பரிசுகோப்பை வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி