புதுச்சேரி ஏனாம் சிறையில் இருந்து சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனை கொண்டுவரப்பட்ட ஆயுள் தண்டனை கைதி மர்டர் மணிகண்டன் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் இருந்த அவரிடம் கேமரா செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கைதிகள் சிலர் செல்போன் வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் சூப்பிரண்டுகள் ரகுநாயகம், வீரவல்லபன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சிறைக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் 2 செல்போன் சார்ஜர்கள் மற்றும் மின்சார வயர்கள் கைப்பற்றப்பட்டது. இது குறித்து சிறை சூப்பிரண்டு பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் புதுவை கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.