புதுச்சேரி காலப்பட்டு மத்திய சிறையில் 350-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை சிறை கைதிகள் உள்ளனர். அவ்வப்போது சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது பிரபல கைதி மர்டர் மணிகண்டனிடம் மொபைல்போன் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் சிறை நிர்வாத்தை பழிவாங்க வீடியோ தயாரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து சிறைத்துறை கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.