காந்தி ஜெயந்தியையொட்டி காங்கிரஸ் சார்பில் ரத்த தானம் முகாம்

74பார்த்தது
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உழவர்கரை தொகுதி சமுதாய நடைகூடத்தில் மாணவர் காங்கிரஸ் சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. மாநில செயலாளர் சூரியமூர்த்தி மற்றும் மத்திய மாவட்ட துணை தலைவர் சிவ பிரகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் ஹர்ஷவர்தன் தலைமை தாங்கினார். மேலும் நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளர்களாக
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் துணை சபாநாயகர் எம் என் ஆர் பாலன், முன்னாள் அரசு கொறடா திரு ஆனந்த ராமன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இதன் மூலம் சேகரிக்கப்பட்ட ரத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சென்றடைகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி