அங்காளன் எம்எல்ஏ பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக MLA

66பார்த்தது
புதுச்சேரி திருபுவனை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. திருபுவனைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தொகுதியின் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கியும் ஆலயங்களில் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து கலிதீர்த்தால்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அமிர்தீஸ்வரி மண்டபத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், சிவசங்கர், ரிச்சர்ட் ஆகியோர் கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்களுக்கு னிஞ்சஅரிசி, மளிகை பொருட்கள் ஆகிய தொகுப்பினையும் மற்றும் புடவையும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் ஆயிரம் நபர்களுக்கு மேல் பிரியாணி வழங்கப்பட்டது. மேலும் தொகுதியின் பல்வேறு இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் அங்காளனின் ஆதரவாளர்கள் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பட்டினை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் ஆதரவாளர்கள் வெகு சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி