தேர்தலில் பாஜக தோல்வியால் பாஜக தலைவர் பதவி விலக வேண்டும்.

76பார்த்தது
தேர்தலில் பாஜக தோல்வியால் பாஜக தலைவர் பதவி விலக வேண்டும்.
இதுகுறித்து புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது உள்ள புதுச்சேரி மாநில பாஜக தலைவர் செல்வகணபதி பாஜக பழைய நிர்வாகிகளை மற்றும் அமைப்புகளை கலைத்துவிட்டு தனக்கு வேண்டியவர்களை நியமனம் செய்ததே தோல்விக்கு காரணம் என குற்றச்சாட்டிய அவர், சித்தாந்த ரீதியாக செயல்படாமல் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர் தான் செல்வகணபதி எனவும் புகார் தெரிவித்தார். மேலும் பாஜக வெல்ல வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியை காங்கிரசுக்கு விட்டு கொடுத்த பெருமை செல்வகணபதிக்கே சேரும் என்றும், பாஜக வேட்பாளர் தோல்விக்கு பொறுப்பேற்று செல்வ கணபதி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் கட்சி மேலிடம் அவரை நீக்க வேண்டும் எனவும் பாஜக முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி