புதுச்சேரி மாநிலம், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள வில்லியனூர் கொம்யூன், ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடப்பாக்கம் கிராமத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு கட்டிடத்தில் பழுது மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ. 29, 25, 000/-க்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசாணை பெறப்பட்டது.
இப்பணிக்கான பூமி பூஜையை ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான ஏ. கே. சாய் ஜெ. சரவணன்குமார் கலந்து கொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவிப்பொறியாளர் பன்னீர், இளநிலைப்பொறியாளர் ராஜதினேஷ், கால்நடைத்துறை இயக்குனர் மகேஸ்வரி, மருத்துவர் ஆனந்த்ராமன் மற்றும் பாஜக மாநில செயலாளர் ஜெயக்குமார் ரெட்டியார், பாஜக தொகுதி ஒருங்கிணைப்பாளர் சாய் தியாகராஜன், முன்னாள் தொகுதி தலைவர் ஐய்யனார், பாஜக தொகுதி தலைவர் முத்தாலு முரளி,
என். ஆர். காங்கிரஸ் இராமநாதன், பாஜக பிரமுகர்கள் முருகன், சிவசங்கர், முரளி, பாலு, குப்புசாமி, பழனி, மல்லிகா , அன்னபூரணி, உட்பட ஊர் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.