ரூ. 35, 96, 000 மதிப்பீட்டில் உட்புற சாலை பணிக்கான பூமி பூஜை

79பார்த்தது
புதுச்சேரி மாநிலம் உழவர்கரை தொகுதிக்குட்பட்ட அருள் நகர் மற்றும் அன்னைதெரேசா நகரில் உள்ள குறுக்கு தெருக்களுக்கு 35 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உட்புற சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் கலந்து கொண்டு பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் புதுச்சேரி பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் கோட்ட செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் சீனிவாசராம், இளநிலை பொறியாளர்கள் சிவக்குமார், தேவர், குலோத்துங்கன், அருண்ஆனந்த் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி