யுனைடெட் புதுச்சேரி அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் 6-ம் ஆண்டு மாநில அளவிலான மல்யுத்த போட்டி புதுச்சேரி உப்பளம் ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. புதுச்சேரி மல்யுத்த சங்க நிறுவன செயலாளர் மாஸ்டர் வினோத் தலைமை தாங்கினார். ஜூனியர், சப்-ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, யானம், ஆகிய பிராந்தியங்களில் இருந்து 850-க்கு மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகள் தேசிய அளவில் நடைபெற உள்ள மல்யுத்த போட்டியில் தகுதி பெற்றுள்ளனர்.