அருணாச்சல பிரதேசம், மிசோரம் மாநில உதய நாள் கொண்டாட்டம்

1074பார்த்தது
அருணாச்சல பிரதேசம், மிசோரம் மாநில உதய நாள் கொண்டாட்டம்
அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில உதய நாள் கொண்டாட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் ஐதராபாத்தில் இருந்து இணைய வழியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி மருத்துவமனை ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் கல்வி பயிலும் அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது, துணைநிலை ஆளுநர் சார்பில் செயலர் அபிஜித் விஜய் சௌதரி விருந்தினர்களை கௌரவித்தார். தொடர்ந்து மணாவர்கள் தங்கள் மாநில பாரம்பரிய நடனங்களை ஆடினர். இதனை துணைநிலை ஆளுநர் தமிழிசை இணைய வீடியோ வாயிலாக கண்டு ரசித்து வாழ்த்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி